VLE, ஆதார் பதிவு மையம் ஆரம்பிக்க
தேவையானவை மற்றும் சி எஸ்.சி எஸ் பி வி (CSC SPV) யில் அனுமதி பெறுவதும் எப்படி?
முதலில் கிராமபுற தொழில் முனைவராக (VLE),
மத்திய அரசின் CSC மையத்தில் பதிவு செய்ய வேண்டும்,
OMT ID வாங்க வேண்டும்.
மையம் நடத்துவதற்கு தேவையான லேப்டாப் கணினி, வெப் கேமரா. பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்,
ஐரீஸ் ஸ்கேனர் பல்நோக்கு பிரிண்டர் , யூஎஸ்பி ஹப்,சி.எப்.எல் லைட், ஆகியவை முன்
கூட்டியே வாங்கி வைத்திருக்க வேண்டும், பதிவு செய்ய போட்டோ எடுக்கும்போது
வருபவர்களின் பின் புலம் வெண்மையாக இருக்க வெள்ளை துணி அல்லது வெள்ளை நிறத்தில் சுவர்
இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கிராம புற தொழில் முனைவோர் எல்லாவற்றையும்
ஏற்பாடு செய்து விட்டு CSC மையத்திற்க்கு விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும்.
விண்ணப்பம் செய்ய https://register.csc.gov.in/register
UID சர்டிபிகேட் வைத்துள்ள சூப்பர்
வைசர் அல்லது ஆப்ரேட்டர் மற்றும் பதிவு செய்ய வருவோரின் டாக்குமெண்ட்களை
சரிபார்க்க UID குறிப்பிட்டுள்ள வேரிபயர் அலுவலரை பதிவு செய்ய படும்
நேரங்களில் பயன் படுத்தி கொள்ள வசதியாக ஒருவரை நியமிக்க வேண்டும், அவர் ஓய்வு
பெற்றவராகவும் இருக்கலாம்.
2.UID KIT CSCSPV யில் கிடைக்குமா?அல்லது எப்படி எங்கு வாங்க வேண்டும்?
நீங்கள் UID குறிப்பிட்ட, அனுமதி பெற்றவரிடமிருந்து வாங்க வேண்டும். இதன்
விலை சுமார் Rs.1,30,000 – 1,40,000 வரை இருக்கலாம். CSCSPV கிட்டை
நேரடியாக விற்கவில்லை.
3.சூப்பர் வைசர் /ஆபரேட்டர் சர்டிபிகேட்
எப்படி பெறுவது?
UID-NSEIT இணையதளத்தில் தேவையான விவரங்கள் உள்ளது,
4. ஆதார் என்ரோல்மென்ட் விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அத்தாட்சி
சான்றிதழ்களை சரிபார்க்க டாக்குமென்ட் வெரிபயர் என்ன தகுதி பெற்று இருக்க வேண்டும்
என்று UIDAI வரையறுத்துள்ளது. அதன் படி Class3/GroupC மற்றும் அதற்கு மேல் ஓய்வு
அல்லது பனியில் உள்ள அரசு ஊழியராக இருக்க வேண்டும். அவர் என்ரோல்மென்ட் மையத்தில்
பொறுப்புள்ள (அதிகாரமுள்ள) நபராக கருதப்படுகிறார். எனவே ஆதார் பதிவு மையத்தில் இவரின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5. CSCSPV யில் பதிவு செய்து என்ரோல்மென்ட் ஏஜென்சியின் பெயர், ஏஜென்சி எண் பெறுவது அவசியம்,
இன்னும் பல விவரங்கள் அடுத்த பதிவில் ...