Wednesday, 11 December 2019


திருமணத்திற்கு பிறகு பெண்கள் பான் கார்டுகளில் பெயரை மாற்றுவது எப்படி


திருமணமான பெண்கள் பான் கார்டுகளில் பெயர்களை மாற்ற விரும்பினால் அவற்றை மிக எளிதாகச் செய்ய முடியும்.

உதாரணமாக திருமணம் ஆகாத இளம்பெண் தனது தகப்பனார் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்திருப்பார். அவர் திருமணம் ஆகாமல் இருக்கும் போது பான் கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அவருடைய பான் கார்டில் அவருடைய சிறப்புப் பெயராக அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே திருமணமான பெண்கள், பான் கார்டுகளில் உள்ள தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக திருமணச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பெயர் மாற்றுவதற்கான கெசட் அலுவலகத்தின் சான்று மற்றும் கணவரின் பெயருக்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும்

 
பான் கார்டுக்கான விண்ணப்பத்தில் உள்ள தகுந்த மற்றும் தேவையான பகுதிகளை நிரப்ப வேண்டும்.உங்களுடைய கையெழுத்தில் மாற்றம் தேவைப்பட்டால், அந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம்.ஒருவேளை திருமணம் செய்யாத தனி ஆளாக இருந்து, பான் கார்டில் பெயரை மாற்ற விரும்பினால், உங்கள் பெயர் மாற்றத்திற்காக கெசட் வழங்கிய சான்றை வழங்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.


ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.மேற்சொன்ன எல்லா உதாரணங்களிலும், பான் கார்டில், பெயர்களை மாற்ற விரும்புவோர், விண்ணப் படிவங்களில் தகுந்த இடங்களில் தகுந்த தகவல்களை நிரப்ப வேண்டும். அதோடு தகுந்த சான்றிதழ்களையும் அவர்கள் வழங்க வேண்டும்

திருமணத்திற்குப் பின்பு பெயரில் மாற்றம் ஏற்பட்டால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். 


No comments:

Post a Comment